2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - கடகம்

2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - கடகம்

சூழ்நிலைகளுக்கு தகுந்தபடி தன்னை மாற்றிக்கொள்ளும் கடக ராசி வாசகர்களே!
 
எதிர் வரும் 01-05-2024 முதல் உங்களின் தொழில் ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் இனிமேல் லாபஸ்தானத்தில் வந்து அமர்வதும் அவர் பார்க்குமிடங்களால் சிறப்பான நல்ல பலனைப் பெறுவீ்கள். 
 
அட்டம சனியின் தாக்கத்தால் கடந்த காலத்தில் சில பாதிப்புகளை அடைந்து வந்த உங்களுக்கு, குரு லாபஸ்தானத்தில் அமர்வதன் மூலம் நல்ல பலனைப் பெறுவீர்கள். தனி திறமையுடன் செயல்படும் வல்லமை உண்டாகும். உங்களின் ராசிக்கு மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தையும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், களத்திர ஸ்தானத்தையும் பார்ப்பது நற்பண்புகளையும், மேன்மையும் உண்டாகும். 
 
உங்களின் கடந்த கால தொய்வு நிலைமாறி நீங்கள் எடுக்கும் முயற்சிகள் செயல்படதுவங்கும். எவ்வளவு காலத்தில் முடியும் என்று இருந்த நிலை மாறி, விரைவில் முடிவு எட்டும். பூர்வ புண்ணிய பலம் பெற்று உங்களின் பூர்வீக சொத்துகள் சம்மந்தமான பிரச்சனை தீர்வாகும். காதல் திரும்ணம் நிறைவேறும்.
 
உங்களின் எண்ணம் போல் வாழ்வு சிறக்கும் குலதெய்வ அனுகிரகம் கிடைக்கும். எடுத்த காரியம் தடையின்றி நடக்கும். உங்களின் கூட்டு தொழிலில் நிதானமான போக்கு... உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். வெளிநாடு செல்லும் சூழ்நிலைகள்.. வளம் பெற செய்யும். காரியத்தில் கவனம் செலுத்தி மேன்மையை அடைவீர்கள்.
 
குறுகிய கால தொழிலில் முதலீடு செய்து,விரைவான வளர்ச்சியைப் பெறுவீர்கள். திருமண காரியம் இனிதாக நடக்கும். மறுமணம் செய்ய உகந்த காலமாக அமையும். திருமண தடைகள் நீங்கி, விரைவில் நல்ல வரன்கள் அமையும். பொருளாதார மேன்மை உண்டாகும்.
 
பரிகாரம்:
 
வியாழக்கிழமைகளில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டும், தட்சணாமூர்த்தி ஒரு நெய் தீபமேற்றியும் வேண்டிக் கொள்ள, சகல காரியமும் கைகூடும். மேன்மை உண்டாகும்.